Monday, October 11, 2010

எங்கே செல்லும் இந்த பாதை !!!?!!????..


கண்டிப்பாக கடைசில இருக்கிற காணொளி பாருங்க..

The great E-Waste:
மின்னணுக் கழிவுகள் (அ) குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் தேவையில்லையே என்று எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன.



                            

அதாவது நம் வீட்டிலிருக்கும் பழைய (இயங்கும் நிலையில் இருந்தாலும் கூட) கேதோடு கதிர் குழாய்(CRT) படத்திரை கொண்ட தொலைக்காட்சி பெட்டி / கணினி திரை இவற்றை போட்டு விட்டு (LCD) படிகச்சீர் நீர்மத் திரை / சீருறு நீர்மத் திரை, அல்லது ப்ளாஸ்மா படத்திரை வாங்குவது..




இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன.
இவ்வாறு தூக்கி எறியப்படும் கருவிகள்:
  • சலவை/ துவையல் எந்திரம் போன்ற பெரிய கருவிகள்
  • மின்னலை அடுப்பு போன்றவை.
  • செல்லிடபேசி, தொலைபேசி போன்றவை..
  • மின்னணு இசைக்கருவிகள்,தொலைக்காட்சி போன்ற 
  • பொழுதுபோக்குக்கருவிகள், குளிர்பதனப்பட்டி, குளிரூட்டி போன்றவை..
  • கணினி மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள்

இவற்றின் மின் உறுப்புகள் (Components): மின்கம்பி - Wire, நிலைமாற்றி - Switch(தொடுப்பி, தொடுக்கி), மின்தடையம் - Resistor ( மின்தடை), மின்தூண்டி - Inductor, மின்தேக்கி - Capacitor (மின்கொண்மி), இருமுனையம் - Diode, திரிதடையம் - Transistor, அலைக்கம்பம் - Antenna, மின்மாற்றி - Transformer, Connectors -இணைப்பி, Fuse (துண்டிபான்), Integrated circuit - ஒருங்கிணைச் சுற்று, மின் தொகுசுற்று, நுண் தொகுசுற்று,  Printed circuit board -வழிபதி மின்சுற்று அட்டை (/தட்டை)) வ.மி.த; மின் சுற்றட்டை, உணரி - sensor போன்ற பல்வேறு பாகங்கள் பிரித்தடுக்கப்பட்டு அதிலுள்ள சில உலோகங்கள் மற்றும் சில மறுசுழற்சி தகுதி வாய்ந்த பொருட்களை மட்டும் பிரித்தெடுத்து விட்டு மீதமுள்ள பல்வேறு வேதி பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆற்றிலும், ஆற்றோர நிலப்பகுதிகளிலும் அப்படியே போடபடுகிறது.. மண்ணை, ஆற்று நீரை விசமாக்கி சுற்று சூழலையும் கெடுத்து, நிலப்பகுதில் போடப்பட்ட வேதி/ மின்னுறுப்புகள் / பிளாஸ்டிக் பொருட்களையும் எரித்து காற்று மண்டலத்தை நாசப்படுத்தி அழிக்கபடுகிறது..

மின்கம்பி (Wire), வழிபதி மின்சுற்று தட்டைகள்(Printed circuit boards) இவை அதனுள்ளிருக்கும் சில உலோகங்களுக்காக அடர்ந்த கந்தக / ஹைட்ரோகுலோரிக் அமிலங்களில் முக்கி எடுக்கபடுகிறது இதன் மூலம் வெளியே உள்ள பிளாஸ்டிக் கரைக்கப்படுகிறது..இந்த கழிவு நேரடியாக ஆற்று நீரில் கலக்கப்பட்டு ஆற்றுநீர்வாழ் உயிரிகளை மட்டுமல்லாது கடல் வாழ் உயிரிகளையும் பதம் பார்க்கப்பட்டு அது விசமாக மனிதுடலையே வந்தடைகிறது.. 





இந்த விலை குறைந்த ஆபத்தான முறைகலனைத்தும் வளரும் அல்லது ஏழை நாடுகளில் கடைப்டிக்கப்படுகின்றன. அதனால் விலை உயர்ந்த கடினமான முறைகளை பின்பற்றுவதற்கு பதிலாக வளர்ந்த மேலை நாடுகள் இந்தியா, சீனா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகிறது..
இன்றைக்கு இந்தியா வலிமையான நாடுகளின் பட்டியலில் மூன்றவதாம்... அதனால்தானோ என்னவோ இங்கு கழிவாக்கபடுகிறது..



என்னதான் வழி இதெற்கெல்லாம்... இம்மாதிரியான அதுக நச்சுத்தன்மை கொண்ட மின்னுருப்புகளை இனி தங்களது தயாரிப்புகளின் போது குறைத்துக் கொள்கிறோம் என்று சில நிறுவனங்களும் ஒத்துக்கொண்டுள்ளன.. அது மட்டுமல்லாது அவற்றை மறுசுலற்சிக்கும் எடுத்துக்கொள்ள நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்கள் சம்மதித்துள்ளன எனவே இது போன்ற குப்பைகளை அந்தந்த நிறுவனங்களிடமே ஒப்படைத்து விடுவது நலம்..


முடிந்தளவு எந்தவொரு மின்பொருளும் தேவையில்லாமல் குப்பையவதை தடுக்க வேண்டும். அல்லது முறையான வழிகளில் மறுசுழற்சி செய்ய வேண்டும்..


மேலும் விவரங்களுக்கு: http://www.bbc.co.uk/news/world-europe-10846395

கீழே உள்ள காணொளிகளை பாருங்கள்:





நன்றிகளுடன்..
-ஈரோடு பாலா.