Tuesday, July 6, 2010

விஞ்ஞானம் எப்போதும் வியப்புதான்..

விஞ்ஞானிகள் என்றும் வியக்க வைக்கும் அறிவியலின் படைப்புகளை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.. இன்றும் பலவேறு ஆராய்ச்சிப்பணிகள் உலகத்தின் பல பகுதிகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

அதன் வரிசையில் சிலவற்றை பார்ப்போம்,

இறக்கைகள் இல்லாத மின்விசிறிகள் டைசன் என்பவரது படைப்பில் காற்றை பன்மடங்காக பெருக்கி தரும் ஒரு வித்தியாசமானதொரு கற்றாடடி பாருங்கள்...

 

இங்கு அவருடைய வித்தியாசமான சில படைப்புகளை பார்க்கலாம்:



டெஸ்லா அறிஞரின் அடிப்படை அறிவியல் கோட்பாடுகளுடன் முதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் கம்பில்லா உயரழுத்த மின்சார இணைப்புகள்.. இனி வரும் காலத்தில் கம்பில்லா மின்கம்பங்கள் தான் நிற்க்கும் பாருங்களேன்,  வீட்டில் கூட எதற்க்கும் மின்கம்பிகள் (cable, wire) இல்லாமலிருப்பது எவ்வளவு சுலபம், அதற்கான ஆய்வுகளின் ஆரம்பகட்டமாக சில நம்ப முடியாத நம்மை அதிசயத்திலால்த்தும் படைப்புகளை பாருங்களேன்..


 
MIT அறிஞர்களின் தொழில்நுட்ப விளக்கம்:http://www.witricity.com/pages/technology.html


மின் காதுகளாக மின்ஒலிவாங்கி (mike), மின் குரல்வளைகளாக மினோலிப்பெருக்கி (speakers), அறிவியல் கண்ணாக மின் ஒளிவாங்கி படைக்கருவிகள் (cameras) .... என பல விந்தைகளின் வரிசையில் மின் மூக்கு (E-nose) சில குறிப்பிட்ட இடங்களில் தற்போது பயன்படுத்த பட்டு வந்தாலும், முழுவதுமான மனித நுகர்திறனுக்கு இடான தொரு தொழிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுகொண்டுதான் இருக்கிறார்கள்..
பல விதமான வேதிப்பொருளை பல வித வேதிகட்டமைப்பு வேதிப்பொறியியல் சோதனைகளின்போது அதன் மின் அலைகளாக மாறும் திறன் பற்றிய ஆய்வுகள் இங்கு காணலாம்..
http://www.buzzle.com/editorials/2-18-2005-65938.asp

 

இன்னும் பல அறிவியல் விந்தைகள் இவ்வுலகில் நடக்க ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது..


-ஈரோடு பாலா.

.