நாளையிலிருந்து...
நாளையிலிருந்து கண்டிப்பாக..
நாளையிலிருந்து நிச்சயமாக...
இப்படித்தான் ஒவ்வொருநாளும் சென்றுகொண்டே இருக்கிறது.. என்ன செய்ய..
அந்த திட்டமிட்ட கனவு கோட்டையை பிடிப்பதற்க்குள்தான் எவ்வளவு காலம் சென்றுகொண்டேயிருக்கிறது.... அல்லது சென்றாகிவிட்டது..
நாட்கள்தான் எவ்வளவு வேகமாக செல்கிறது....
அப்படிலாம் இல்லைங்க எல்லா நாட்களும் இருபத்துநான்கு மணி நேரங்களைத் தான் கொண்டது!..
கனவு கோட்டையை பிடிப்பதற்கு நாம்தான் எவ்வளவு காலம் கடத்திக்கொண்டிருக்கிறோம்.. அல்லது நமது உடல் நலனில் தான் எவ்வளவு கட்டுப்பாடில்லாமல் /கவனமில்லாமல் இருக்கிறோம்..
இந்த மாதிரிதான்ங்க ஒவ்வொரு திட்டமிட்ட பல செயல்களிலோ / உடல் நலனிலோ நம்மில் பலர் கோட்டையை விட்டுவிட்டோம்.. விட்டுகொண்டேயிருகிறோம்..
தற்காலிக சுகத்திருக்கு அடிமையாகிவிட்ட/ சோம்பல் /மன கட்டுபாடற்ற தன்மை தான் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம்.. இன்றே செய் நன்றே செய் இது தான் தீர்வு..
சொல்லுரதேல்லாம் கடினமில்லைங்க.. அப்படினா... உழைக்காமல் உயர்வு இல்லை,.. கடுமையான ஆரம்பம் சுகமான வாழ்க்கை.. இது அனைவரும் அறிந்த உண்மைதான்!!
தினம் தினம் இப்படித்தான் ஒரு கொள்கை அல்லது திட்டம் தள்ளிப்போடபடுகிறது.. உதாரணமாக நாளையிலிருந்து காலையில் நேரமாக எழுந்து விடலாம்.. நாளையிலிருந்து நான் மது சாப்பிட மாட்டேன்.. புகைபிடிக்கமாட்டேன்.. நாளையிலிருந்து உடற்பயிற்ச்சி செய்யலாம்.. நாளைக்கு படித்துக்கொள்ளலாம்.. நாளையிலிருந்து என்ற வார்த்தை மட்டும் மாறாமல் போய்விடும் சற்றும் நாம் கவனம் கொள்ளாமல் விட்டு விட்டால்..
நாளையிலிருந்து நான் மது சாப்பிட மாட்டேன்.. இந்த செயலை எடுத்துக்கொண்டால்.. ஒவ்வொரு புதுவருடமும் ஆரம்பம் ஆகும் போதும் வெகுவானோர் இப்படி தான் எண்ணுகிறார்கள் .. ஆனால் அது நடக்கவில்லை இதை டாஸ்மாக் இணையத்தளமே சொல்கிறது...
ஒவ்வோர் ஆண்டும் புதுவருடமும், தீபாவளி, பொங்கல், போன்ற நாட்களில்கணக்கிட்டு பார்க்கையில அது சென்ற ஆண்டை விட கணிசமான அளவு அதிகமகியிருப்பது தான் உண்மை.. அதுவும் மது போதை பற்றிய விழிப்புணர்வு அதிகமானாலும் சரி.. என்னதான் அட்டையிலேயே/குப்பியிலேயே அபாய குறியிட்டிருந்தாலும் சரி.. நிறுத்தனுமென்று முடிவெடுத்து விட்டால் நிறுத்தப்பட்டாகவேண்டும்.. அது தான் கட்டுப்பாடு...
குறைந்தபட்சம் ஒரு சதவிகிதமாவது ஒவ்வொரு நாளும் எண்ணத்தின் திட்டம் அல்லது செயலுக்கான வேலை நடந்தாலே அது வெற்றியின் பாதையில் செல்கிறது என்று கொள்ளலாம்..
அதனால் தான் இன்றிலிருந்து இப்போதிலிருந்தே முடிவு எடுப்போம் அதுவும் சரியனதாகருக்கட்டும்...
உங்கள் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :)
.
1 comment:
நல்ல பதிவு...வாழ்த்துகள்.. இன்னும் நிறைய எழுதுங்கள்.
Post a Comment