உங்களுக்கு ஒன்னு தெரியுமா இப்போ இந்தியாவுல தமிழ்லதான் எல்லோரும் பேசுரோம்ன்னு.. பக்கத்துக்கு நாடுகளுக்கு மட்டும் தெரிஞ்சுக்கிட்டுருந்தது இப்போ அமெரிக்கா ஆஸ்திரேலியா பிரிட்டன் அப்படின்னு எல்லோருக்கும் தெரிஞ்சு.. தமிழ மிக விரைவா எல்லோரும் கத்துகிட ஆசைப்பட்டு எல்லோரும் இப்போ இந்தியா நோக்கி வர ஆரம்பிசுட்டாங்கப்பா..அதனால இந்தியா நோக்கி ஒரே வான்வெளி கடல் தரை வழி போக்குவரத்து கூட்ட நெரிசல சொல்ல முடியல...
இந்திய அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட பல அதிகாரிகள் என்னதான் பல காரணம் சொல்லி இந்திய நுழைவுரிமையை (விசா) வழங்க மறுத்தாலும் பல நாடுகளிலும் கையில் கடவுச்சீட்டுடன் (பாஸ்போர்ட்) நிற்க்கும் கூட்டம் குறையவில்லை..
என்னதான் உலக மக்களுக்கு அவர்களுகென்று தனிப்பட்ட ஆசை என்று ஓன்று இருந்தாலும்கூட அவர்களின் அதிகப்படியான விருப்பம் (passion) தற்போதுள்ள தமிழ் மீதான காதல் தான்...
எப்படியோ என்னவோ எதுவோ ஏதோ அவர்களை இந்தியா பக்கம் அவர்களை ஈர்த்துவிட்டது என்று சொல்லமுடியாது காரணம் ஒன்றுதான் அது தமிழ்..
இரு ஆஸ்திரேலிய நண்பர்கள் பேசுகையில்
௧.டேய் உனக்கும் இந்திய நுழைவுரிமை கிடைச்சுதா இல்லையா?
௨.எனக்கு அந்த குடுப்பனை இல்லைடா.. நானா ஒரு திருக்குறள வழிய தப்பா சொல்லி கெடுத்துகிட்டேன்டா..
௧.போடா நீ என்னருந்தாலும் திருக்குறள தப்பா சொல்லிருக்க கூடாது நானே அவன்கிடதுலருந்தேன்னாலும் அப்படிதான் பன்னிருப்பேன்..
௨.உணர்ச்சிவசப்பட்டு அரைகுறையா ஒரு குரள நான் சொல்லிருந்திருக்க கூடாது தான்.. என்ன செய்ய இந்தியா போகணும் வாழ்க்கைல கொஞ்ச நாளாச்சும் மகிழ்ச்சியா கழிக்கனும்னு ஒரு ஆசை.. இந்தியாலதான்டா எல்லா விதமான சிறப்பான செயலும் நம்பமுடியதபடி நடக்குது..அங்கதான் எந்த செயலும் /பொருளும் யாரையும் பாதிக்காத மாதிரி பாத்துக்கிறாங்க பயன்படுத்துறாங்க.. ஒண்ணுமில்லையாம் ஒரு பிளாஸ்ட்டிக் கழிவவச்சு சாலை போட்டுருக்காங்கலாம் பாரு..அதுமட்டுமா இந்தியா முழுவதும் எங்கும் எதிலும் சுத்தமன அப்படியோரு சுத்தம்.. அவங்க மின்சரமாகட்டும் மின்சாதன பொருட்கலாகட்டும் எதுவும் வீணடிக்கப்படுவதேயில்லை..
௧.அவங்கல்ல நிறைய பேர் விவசாசம் செஞ்சுதான் உழைச்சுதான் சாப்பிடுறாங்க நம்பள மாதிரி இல்லைடா..
௨.இதெல்லாம் என்னடா.. அவங்ககிட்ட இருகிற தொழில்நுட்பதத பார்த்து வாயடச்சு போய்தானே நாசா இப்போ இந்தியாகிட்ட மண்டியிட்டு கிடக்கு.. அவங்களுக்கு இருக்கிற நல்ல மனச பார்த்து சீனா பாகிஸ்தான் லங்கா எல்லாம் எங்க நாட்ட இந்தியாவோட சேர்த்துக்க சொல்லி வற்புருதிட்டுருக்காங்கலாம்.. இதுக்கெல்லாம் காரணம் தமிழ்ல திருக்குறள் மாதிரியான நல்ல பலத அவங்க பின்பற்ற ஆரம்பிச்சது தான்...
௧.நீ என்ன சொல்லு.. நம்மல்ல பல பேரு பணத்துக்காகத்தான் போறாங்க.. இன்றைய நிலவரப்படி ஒரு ரூபாய் இந்திய பணத்துக்கு ஐநூறு நம்ம டாலர்ன சும்மாவா? இதெல்லாம் தெரிஞ்சுதான் சில நிறுவனங்கள் கூகிள் மாதிரி முன்னமே தமிழுக்கு இடம் ஒதுக்கிருந்தாங்க போல.. அங்க எதுக்குமே லஞ்சமே கிடையாதாம்டா..
௨.மனுசன்ன அவன் இந்தியன்னு சொல்லு.. இருந்தாலும் நான் என்ன செய்ய.. இந்தியா இல்லேன்னா நான் இலங்கை சிங்கப்பூர் ஏதாவதொரு பக்கம் போய் தமிழ கற்றுக்கிட்டு வந்து இங்க ஒரு வேலை பண்ணலாம்னு யோசிக்கிறேன் "இங்கு தமிழ் மொழி ஒரு மாதத்தில் கற்று தரப்படும்" அப்படின்னு ஒரு பலகைய வச்சு வகுப்பெடுத்தா?
௧.ம்ம் அது சரி.. ஆனா இலங்கை ராஜபட்சே ஒரு வாரத்துல தமிழ முடிஞ்சளவு நல்ல பேச கற்றுக்கிட்டு போன மாவீரன் நாள்ல தலைமைதாங்கி சிறப்புரையாற்றும் போது பிரபாகரனை பற்றி பேசும்போது கதறிக் கதறி அழுது இலங்கை அது இந்தியாவின் ஒரு அங்கம்னு சொல்லி நானும் தமிழன்தானு சொன்னது மறந்துருச்சா என்ன உனக்கு..
௨.சரிடா நான் வீட்டுக்கு போறேன்.. ஒரு நாள்ல நான் ஒரு குறள் கற்று கற்றுகிட்ட திருக்குறள்ல நாலு பேருக்காவது சொல்லனும்னு நானொரு முடிவு பண்ணிருக்கேன்..
இப்போது இந்தியாதான் வளமான நாடு.. பொருளாதார அடிப்படையில் சிறப்பாக இயங்கி வரும் நாடு.. பல நாடுகள் கடன் பெற்றுள்ளன..சுத்தமான நாடு..உதவிக்கரம் நீட்டும் நாடு..என அனைத்திலும் முதலிடம் வகிக்கிறது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை...
உலகெங்கும் தமிழ் மிகவேகமாக பரவி வருகிறது..
அனைத்து நாடுகளிலும் தமிழ் பள்ளி /கல்லூரி /அலுவலகங்களில் விருப்பமகவே இருந்தாலும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது..
இப்போ நீங்க இத படிக்கும் போது கண்ணா மூடாமலேயே படிச்சுகிட்டே நீங்க உங்க கற்பனை திரையை உங்களோட சக்திக்கு ஏற்றாட்ப்போல ஓட்ட ஆரம்பிச்சுருப்பிங்கல..
- பாலா..
tamil pattru ok.. but rombavey mokkaiyaaaa irrrukkku bosss..
ReplyDeleteur ithu thevaiya, lanjam are gud..