கோடியில் விளையாடும் தமிழகம்..
என்ன கொடுமைடா இது...
கீழ இருக்கிற அழகிரி அறிக்கையை கொஞ்சம் படியுங்களேன்..
இந்த அழகிரி வழக்கு போடுவதாக கூறும் மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்கள் லஞ்சத்திற்கு அடிபணியாத நேர்மையான மனிதர் என்ற சிறப்புக்கு பெயர் பெற்ற பலராலும் பாராட்டப்பட்ட ஆட்சியர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன்... (யார் இந்த சகாயம்?)
தேர்தல் ஆணையம் தேர்தலுக்காக சில மாற்றங்களை செய்தது அனைவரும் அறிந்ததே..
சகாயம் தேர்தல் நேரத்தின் சில நாட்களுக்கு முன்புதான் நாமக்கலில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்டார்...
"
என் மீது பொய் வழக்கு போட்ட கலெக்டரையும், எஸ்.பியையும் கோர்ட்டில் ஏற்றுவேன்-அழகிரி ஆவேசம்
மதுரை: என் மீது பொய் வழக்குகளைப் போட்ட மதுரை கலெக்டர் சகாயத்தையும், எஸ்.பி. அஸ்ரா கார்க்க்கையும் நான் விட மாட்டேன். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் ஏற்றாமல் விட மாட்டேன் என்று மத்திய ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை மதுரையில் சந்தித்தார் அழகிரி. அப்போது அவர் கூறுகையில்,
இந்த தேர்தலில் தேர்தல் கமிஷன் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக கெடுபிடியுடன் நடந்து வருகிறது. என் மீது 2 நாட்களில் அடுத்தடுத்து 2 பொய் வழக்குகள் போட்டுள்ளனர். இந்த 2 வழக்குகளையும் யாருக்கு போட்டார்களோ அந்த அதிகாரிகளே அதனை மறுத்து கலெக்டர் தூண்டுதலின் பேரில் இது நடந்தது என கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு அவர்கள் கடிதம் அனுப்பியும் தி.மு.க. தரப்பில் புகார் செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மதுரை கலெக்டர் சகாயம், போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் ஆகிய 2 பேர் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். அவர்களை கோர்ட்டில் ஏற்றி நியாயம் கேட்பேன்.
"
இத என்னனு சொல்ல.. சகாயம் போன்ற நல்லவர்கள் நாலு பேரு இருந்தாகூட இந்த அழகிரி மாதிரியான ஆசாமிகளுக்கு பிடிக்காது.. இந்த முறை தேர்தல் ஆணையம் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது.. இதற்கு இது இடையூறாக இருக்கிறது..
தமிழகம் முழுவதும் சேர்ந்து இதுவரை இருபத்தைந்து கோடிகளுக்கும் மேல் பிடிக்கபட்டிருக்கிறதாம்.. (கணக்கில் வராத கணக்கில் 25 கோடிகள்??)
என்ன சொல்ல நாடு எங்கு போய் கொண்டிருக்கிறது... இதில் சமீபத்தில் திருச்சியில் சிற்றுந்தின் மேல் கிடந்த பணமூட்டை (திருச்சியில் அனாதையாக கிடந்த ஐந்து கோடி?)
இந்த இருபத்தைந்து கோடிலாம் சாதாரணம்.. இன்னும் பலகோடிகள் எங்கெங்கோ பறந்துட்ருக்கோ.. முடியலடா சாமி..
சில தெரிந்த கொடிகள்..
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு வகையில் லட்சம் கோடி ஊழல்.. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்திய வகையில் பல நூறு கோடி மோசடி.. தமிழ்செம்மொழி மாநாடு நடத்தியவகையில் அடிக்கப்பட்டது எண்ணூறு கோடிக்குமேல்.. சாலை மேம்படுத்துதல், மேம்பாலம் கட்டுதல், அடுக்குமாடி வீடு ஒதுக்குதல், பூங்கா அமைத்தல்,
அந்த திட்டம் இந்த திட்டம், அத கொடுத்தேன் இத கொடுக்குறேன்னு சொல்லி அடித்து, அதுக்கும் லஞ்சம் இதுக்கும் லஞ்சம் எதுக்கும் லஞ்சம்..
ஐயோ.. இத கேக்க யாருமே இல்லையா......
கிசான் பாபுராவ் அசாரே (Kisan Baburao Hazare), பரவலாக அன்னா அசாரே என்று அறியப்படும், ஓர் இந்திய சமூக சேவகர். மகாராட்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, ஓர் மாதிரி சிற்றூராக திகழ்ந்த,ராலேகாவ் சித்தி என்ற சிற்றூரின் மேம்பாட்டிற்காக இவராற்றிய பணிக்காக அறியப்பட்டார். இவரது பணிகளுக்கு அங்கீகாரமாக 1992ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூசன் விருது வழங்கியுள்ளது. நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டமாக்கலுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறப்புற பணியாற்றினார். தற்போது ஊழலுக்கு எதிராகப் போராடிவருகிறார்.
இவர் ஜன் லோக்பால் சட்டமாக்கலுக்காக தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளார். இது தொடர்பாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது அரசு பிரேரித்துள்ள லோக்பால் சட்டவரைவினை விட வலுமிக்கதாகவும் அம்புட்ஸ்மன் எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்தும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவை இந்தியப் பிரதமர் ஏற்க மறுத்துள்ளநிலையில், ஊழல் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் நடுவண் "லோக்பால்" மற்றும் மாநில "லோக் ஆயுக்த்" நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கும் வகையில் வலுவான லோக்பால் சட்டவரைவினை இயற்ற அரசு பிரதிநிதிகளும் குடிமக்கள் பிரதிநிதிகளும் இணைந்த கூட்டுக்குழு ஒன்றினை அமைக்கக் கோரி ஏப்ரல் 5, 2011 அன்று தில்லியிலுள்ள ஜன்தர் மந்தர் என்ற இடத்தில் சாகும்வரை உண்ணாவிரப் போராட்டம் நடத்துகிறார்.
லோக்பால்கிறது தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போல ஒரு தனிப்பட்ட ஒன்று, இதற்க்கு அமைச்சன், அரசன், அவன் இவன் ஏதும் பாக்காம குற்றம் செய்தவனுக்கு தண்டனை கொடுக்கிரமாதிரியானது..
ஊழல் செய்ய கொஞ்சமும் தயங்காத அரசியல்வாதிகள், .. இந்த மதுரை ஆசாமிகள் மாதிரி மனுசங்க இருக்கும் வரையிலும்.. என்ன லோக்பால் சட்டம் வந்தாலும்.. இந்தாளு சகாயம் மாதிரியானவர்கல தொந்தரவு கொடுத்துட்டு தான் இருப்பாணுக போல.. இதுக்கெல்லாம் இந்தியன் படத்துல வரமாதிரி குத்தி கிழிக்கணும் போல...
எதாவது பண்ணனும்கோ.......
முதல்ல குறைந்த பட்சம் 49 ஓ-லயாவது நம்ம வாக்க போடுவோம்..
நன்றி
- ஈரோடு பாலா.
.