உங்க படுக்கையமைப்பு நீங்க வடதிசைல தலையை வைக்கிற மாதிரி இருகா, கன்னாபின்னான்னு இரவு தூங்கும்முன் சாப்பிடுவதுண்டா, தேநீர்/காப்பி தூங்கும்முன் சாப்பிடுவதுண்டா, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு வெகு நேரம் விழித்திருக்கும்/ காலை அதிகநேரம் தூங்கும் பழக்கம் உண்டா?
அப்படீன்னா.. கவனிங்க.. நம்ம தலைப்பகுதி ஒரு காந்தத்தின் வட துருவம் போன்றது.. நமது பூமியின் வட துருவத்துடன் ஏற்படும் ஒருவித காந்த விசை காரணமாக நமது தலைப்பகுதிக்கு அதிகளவு இரத்தத்வோட்டம் ஏற்ப்படும் அதன் காரணமாக நம்மால் தூங்குவதற்கு மிக தாமதமாகும்..அதனாலதான் நம்ம பெரியவங்க நம்ம கோவில்களில் தெய்வங்கள் எப்போதும் தெற்கு அல்லது கிழக்கு பார்த்தது போல் இருக்கும்.. ஊருக்கு ஒரு கோவில் கண்டிப்பாக இருக்கும்..கோபுரம் மிகச்சிறப்பான இடி தாங்கி..மற்றும் காரணங்கள் பல..
அதைவிடுங்க.. தெற்கு/கிழக்கு திசை நோக்கி கோவில்கள் இருப்பதால் நாம சாமிய உதைக்கரமாதிரி படுக்கமாட்டோம்.. வடக்கு சரி.. மேற்கு ? நமது தென்னிந்திய தக்காணம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்துள்ளதால் தான்.
அதிகமா சாப்பிட்டுவிட்டு உறங்கச்சென்றால் இரத்தவோட்டம் குலம்பிவிடும்.. சாப்பாட்டை சத்துக்களாக மாற்றி இரத்தத்தில் கலக்க செய்வதில் குலருபடியாகும்.. தேநீர்/காப்பி இயற்கையாக தூக்கத்திலிருந்து விடுவிக்கும்..
சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு வெகு நேரம் விழித்திருக்கும்/ காலை அதிகநேரம் தூங்கும் பழக்கம் மற்ற நாட்களில் கண்டிப்பாக பின் விளைவேற்படுத்தும்...
அன்றாட வாழ்கை பயணத்தில் நமது உண்ணும் முறை அல்லது உணவு பழக்க வழக்கத்தில் வெகுவான மாற்றம் ஏற்பட்டிருகிறது.. காலையில் தாமதமாக எழுகிறோம், வேகவேகமாக தயாராகிறோம், அவசரத்தில் அரைகுறையாகவோ அல்லது சாப்பிடாமலோ பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்கிறோம்.. மதியம் கிடைத்த உணவில் முடிந்தளவு சிறப்பித்து விட்டு பின் போழுது வேளையில் சின்ன நொறுக்கு தீனி சாப்பிட்டுட்டு.. அப்புறமா இரவு வேளைக்கு நல்லா ஒரு புடி புடிச்சா வயிறே தாங்காதுப்பாங்கிறளவுக்கு சாப்புட்டு உடனே தூங்கறோம்..
இது என்ன ஒரு அநியாயம் அதுவும் நமக்கு நாமே நம் உடலுக்கு செய்யும் துரோகம்.. ஆமாம் அது மிகவும் தவறானதொரு வழக்கம்தான்..
சாப்பிடவேண்டும்? உடலுறுப்புகள் சாதாரணமாக அதனதன் அடிப்படை செயல்களை செயல்படுதுவதற்கே அதற்கு பலவகையான சத்துக்கள் தேவைபடுகிறது..
எப்படியென்றால்.. காலை உணவு.. இது எட்டு மணி நேர இடைவேளைக்கு பிறகு முடிக்கப்படும் விரதத்தினை (breakfast- break the fast) ஈடுகட்ட வேண்டும்.. அது மன்னனுக்கு பறிமாறப்படும் நிறைவானதொரு அறுசுவை உணவாக இருக்கவேண்டும்.. மதியஉணவு காலை உண்டதை விட சற்று குறைவானதாகவே இருக்கட்டும்.. மாலை நேரத்தில் சிறிதே உணவு.. இரவு வேளை மதிய உணவை விட சற்று குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.. இரவு உறக்கம் குறைந்தது ஒரு மணி நேர இடைவெளிக்கு பின் இருக்கவேண்டும்.. இதுவே சிறந்த உணவு பழக்கம்...
நம் மத்திய கட்டுப்பாட்டு மண்டலம் நம் மண்டையோட்டின் பாதுகாப்பில் பத்திரமாகவுள்ளது.. பல வகையான வேதியியல் மாற்றம் நொடிக்கு பல்வேறு முறையில் பலமுறை நடக்கிறது.. இரத்தவோட்டம் மூலம் உடலுருப்புகளுடன் தொடர்பு கொள்ளப்படுகிறது.. இரத்தத்தின் பல்வேறு வேதி மூலக்கூறுகளால் எந்தவொரு செயலும் மூளைக்கு தெரிவிக்கபடுகிறது.. இது உடலின் பல பாகத்தினை கட்டளைக்கேற்ப ஒரே நேரத்தில் சிறப்பாக செயல்படுத்துகிறது...
குளித்தல்.. உதாரணத்திற்கு குளிக்கும் பொது பல வகையான நன்மைகள் உடல் கிடைக்கபெருகிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது.. எப்படியென்றால், உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மூளைக்கு செய்திகள் வந்தவண்ணம் இருக்கும், அதாவது புறத்தோல் பகுதியிலிருக்கும் தொடுவுணர்வு சார்ந்த நுன் இரத்த நாளங்கள் அதற்கு மேலுள்ள தொல் பகுதியில் யாரோ தண்ணீரை ஊற்றி விட்டார்கள் எதாவது செய்யுங்கள் தலைவரேவென்று செய்தி கொடுக்கபடுகிறது.. இதுபோல அனைத்து உடல் பகுதியிலிருந்தும் இரத்தவோட்டம் மூளையை நோக்கி சிறப்பாக செயல்படுகிறது.. இதனால் உடல் புத்துணர்வு பெறுகிறது...
இதுமட்டுமன்றி தினம் தினம் உடலின் அனைத்து பகுதிகளிலும் இறந்துபோகும் செல்கள் குளிக்கையில் அகற்றப்படுகிறது.. உடலிருந்து வெளியாகும் எண்ணை,உப்பு,தாது,..போன்ற பல கழிவுகள் நீக்கப்படுகிறது..
குளிப்பதால் நம்மை சுற்றயுள்ளவர்களுக்கும் நாமறிந்த செய்திதான்..
எப்படிருக்குனு பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்..
.
.