Thursday, December 31, 2009

இது தேவையா?



இது தேவையா?


தாஜ்மகாலின் அழகிய முன் பக்கம்

தாஜ்மகாலின் பின்னால் யமுனை ஆற்றின் மாசு அதிகரிப்பு ஒரு பக்கம் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது..   
 
ஆற்றில் இல்லை இல்லை ம்ம்ம் சாக்கடையில் பிளாஸ்டிக் பை/ பாட்டில்களால் நீர் தேக்கம் அதனால் துர்நாற்றம் கொசு /விசபூச்சிகள் பெருக்கம் அதனால் பல தோற்று நோய்கள் பரவுதல்(நம் மக்களுக்கு இதன் பாதிப்பு இன்னும் சரிவர தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்)..   இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைதல்..  கடைசில இந்திய பொருளாதரமே பாதிகக்கப்படும்னு சொல்லலாம்..

இந்த சுற்று சூழல் சீர்கேடு தாஜ் மஹால் பக்கத்துல மட்டும் இல்லைங்க நம்ம ஊர்லயும் இருக்கு.. இந்த பிளாஸ்டிக் பையை அழித்தல் ரொம்ப கடினம்.. பிளாஸ்டிக் பையை எரித்தால் வரும் நச்சு யப்பாடி யப்பா.. அத சுவாசிச்சா அவங்களுக்கு ரொம்ப பெரிய பாதிப்பு ஏற்படும்.. நுரையீரல், இதயம், மூளை,... தொடர்ந்து சுவாசிச்சா மூளை புற்றுநோய் வாறதுக்கு கூட வாய்ப்பு அதிகம்ங்க...

சரி அத கொண்டு போய் கடல்ல போட்டுடலம்ன கடல்ல ஒரு உயிர் நிம்மதியருக்க முடியாது..

காற்றுல அப்படியே விட்டா அது உங்களுக்கே தெரியும் என்ன ஆகும்னு.. இது தேவையா?
அப்படீனா என்ன தான் பன்றது? இருக்குறத மறு சுழற்ச்சிக்கு அனுப்பி எவ்ளோ முடியுமோ அவ்ளோ பயன்படுத்திக்கலாம்..


மறு சுழற்ச்சிக்கு அனுப்ப முடியாதத நாம பூமில ஒரு பெரிய ஆழமான குழி வெட்டி புதச்சிட வேண்டியது தான் நம்ம மனசாட்சியையும் சேர்த்து!  ஏன்னா அது பல கோடி வருடம் ஆனதுக்கப்றோம் தான் முழுவதுமா மக்கி போகும்ங்க..
அதனாலதான் சொல்லுறேன் நெசமாத்தான் சொல்லுறேன் பிளாஸ்டிக் வேண்டாம்...
ஐயோ எனக்கு வேண்டாம்னு சொன்னாலும் கட்டாயமா சில தவிர்க்க முடியாத சில வழிகளில் வந்துடுது என்ன செய்ய?  அப்படீனா அத சேர்த்து வச்சு பழையது வாங்கற கடைல போட்டு பைசா வாங்கிகோங்க :)


ஐயோ எனக்கு இன்னமும் சில வழில வருதுங்க அதாவது மாமிசம் வாங்கும் போது தராங்க அத சேர்த்து வைக்கவே முடியாதுங்க.. ஆமால ம்ம்ம் அத ஆழமான குழி வெட்டி புதச்சிட வேண்டியது தான் இல்லனா நீங்க அத சரியாய் குப்பைல பொட்டுடுங்க.. அடுத்த முறை போகும் போது வீட்டுலேர்ந்து ஒரு பாத்திரம் எடுத்து போயிடுங்க அதுல வாங்கிடலாம்..
வேற எதாவது? வழி இருந்தா சொல்லுங்க.. தெரிலனாலும் கேளுங்க..?
வாருங்கள் பிளாஸ்டிக் இல்ல உலகம் படைப்போம் !!
நன்றிகளோடு உங்கள் பாலா..



(குறிப்பு:  இது எனது முதல் ப(ா)திப்பு தவறிருந்தால் மன்னிக்கவும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும் பாலா )