தமிழினம் அழுகிறது அனுமனே
உன்
வால் சுமந்த தீயினாலல்ல
இலங்கையை எரியூட்டாததால்
நிழல் கூட
தலைதெரிக்க ஓடுகிறது
அகதியாக அல்ல
மரணத்தில் விடுதலை தேடி
முக்கால அழுகுரல் இன்னும்
முழுதாய் ஓயவில்லை
சமுத்திர திட்டமாம்
பாலத்தில் பிரச்சனையாம்
சாகிற மக்களுக்காய்
உண்ணாமல் போராட்டமாம்
யாரை நம்ப?
எங்கே
உன் வாலைக் கொடு
தீயிட்டனுப்புகிறேன்
இம்முறேயேனும் மிச்சமின்றி
இலங்கையைச் சாம்பலாக்கு..
***********************************
இதை ஒரு மின்னஞ்சலில் கிடைக்க பெற்றேன்..